புறாமலை என்று சொல்லப்படும் புறாத்தீவு தேசிய கடல்வளப்பூங்கா!!
திருகோணமலை நகரில் இருந்து இருபது கிலோமீற்றர் தொலைவில் இது அமையப்பெற்றுள்ளது.
கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அம்சங்களுள் இது முதன்மையானது
படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடமாக
திருகோணமலையில் இருந்து வடமேற்கில் அமைந்துள்ள நிலாவெளி புறாமலை.
நிலாவெளிக் கடற்கரையில் இருந்து புறாமலை ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
மிகவும் அழகான நிலாவெளி கடற்கரையில் அதற்கு மேலும் அழகு ஊட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள். புறாமலை என்று சொன்ன போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்டர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது.
இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நடாத்துகின்றார்கள்.
மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருகை கற்களோடு கூடியது.
புறாக்கள் அக் காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.
இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சூரிய ஒளியில் Glittering coral சிறு சிறு வர்ணக் கற்கள் தெறிக்கும் அழகே தனிதான். நீரினினுள் கடல் வாழ் மீன்கள் உயிரினங்கள் நீந்திச் செல்வதை கண்டு மகிழலாம்.
புறாத்தீவு தேசியப் பூங்கா உள்ளூர் வழக்கு: புறா மலை என்பது இலங்கையிலுள்ள இரு கடல்சார் தேசியப் பூங்காக்களில் ஒன்று.
இத்தேசியப் பூங்கா இலங்கையிலுள்ள சிறந்த பவளப் பாறைகள் சிலவற்றைக் கொண்டுள்ளது. புறாத்தீவு 1963இல் புகலிடமாகக் குறிக்கப்பட்டது. 2003 இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
இத்தேசியப் பூங்கா இலங்கையில் 17வது தேசியப் பூங்காவாகும். பிரித்தானிய இலங்கையில் இது சுடு பயிற்சித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
புறாத்தீவு இரு தீவுகளைக் கொண்டு, பெரிய புறாத்தீவும் சிறிய புறாத்தீவும் ஆக காணப்படுகின்றது. பெரிய புறாத்தீவு கரையில் பவளப் பாறைகளைக் கொண்டுள்ளது.
புறாமலையில் உள்ள கடல் நீரானது கண்ணாடி போன்று தெளிவாக காட்சியளிப்பதுடன் சுழியோடும் அளவுக்கு அங்கு பாதுகாப்பான ஏற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன இது வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்புகள் உட்பட இலங்கை கடற்படையும் அங்கு இதனை பாதுகாத்து வருகிறது.
எங்கள் திருகோணமலை என்றும் கொள்ளை அழகு அள்ளிப்பருக வாரீர்
சம்பூர் தமிழ்க் கிறுக்கன்

கருத்துகள் இல்லை