உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் திடீர் சோதனை!
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது .
இந்த சோதனை நடவடிக்கையினை உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணியினர் இணைந்து நேற்று முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்பது தொடர்பில் சோதனையிடப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது குறித்த பிரதேசத்தில் 15 உணவகங்கள் மிகவும் தகுதியற்று சுகாதார சீர்கேடுகளுடனும், உணவுகள் மிகவும் தரமற்ற தயாரிப்புக்கள் , உணவு தயாரிக்கும் சமையற்கூடங்கள் மற்றும் பாத்திரங்கள் அசுத்தமாகவும், சமைத்த உணவுகள், பிளாஸ்ரிக் பாத்திரங்களில் சேமிக்கப்பட்டிருந்ததுடன் அழுகிய மரக்கறிவகைகளும் சமையல் பாவனைக்கு பயன்படுத்தபட இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் 1 உணவகத்தில் காணப்பட்ட தகுதியற்ற ரொட்டிகள் மற்றும் மரக்கறிவகைகளும் சோதனை நடவடிக்கையின்போது அழிக்கப்பட்டன.
ஏனைய உணவகங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் , அது தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 2 மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்குனர்கள் சேவையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பெரும்பாலான உணவகங்கள் சீர்கேடுகளுடன் காணப்படுவதால் அவை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு இயங்குமாறும் தவறும் பட்சத்தில் இவ்வாறான விஜயத்தின்போது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தகுதியற்ற உணவங்கள் காணப்படின் அதுதொடர்பில் மக்கள் ஆளுநர் அலுவலக தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு அறிவிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை