மனித இனம் எப்படி தோன்றிற்று..??

ஒரு ஊரில் ஒரு அதி சிறந்த முட்டாள் இருந்தான், அவனை எல்லோரும் செல்லமாக மிஸ்டர் மொக்கை என அழைப்பர், அவனுக்கு ஒரு மகன் இருந்தான் , அவனும் தந்தைக்கேற்ற தனயனாக  அவனைவிட சிறந்த மொக்கையாக திகழ்ந்தான் . அதாவது "அப்பன் எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறடி பாய்வான்" என்பார்களே அப்படி தான் .

மிஸ்டர் மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். "மனித இனம் எப்படி தோன்றிற்று" என்பதே அது.  அவன் அம்மாவைக் கேட்டான்.
அம்மா மனித இனம் எப்படி தோன்றிற்று ?

அம்மா சொன்னாள்..

"கடவுள் முதலில் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"
என்றாள் அம்மா .

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை.

மிஸ்டர்மொக்கையைக் கேட்டான்.
அப்பா மனித இனம் எவ்வாறு தோன்றியது என்று ?

அவர் சொன்னார்...

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"
என்றான் மிஸ்டர் மொக்கை.

மொக்கையின் பையனாயிற்றே..!
இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..?
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. ஆனால் அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

அம்மா சொன்னாள்....

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி..

என் முன்னோர்கள் "ஆதாம் ஏவாள்" பரம்பரைடா   குட்டியா ....

உங்கப்பன் கும்பல்இருக்கே அது "குரங்குப்பரம்பரை" டா குட்டியா ...

அவங்க ..அவங்க ..அவங்க முன்னோர்களை பற்றி தானே பேச முடியும்  இல்லையாடா தங்கம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.