வரலாற்றில் வாழும் ஒண்டிவீரன்!
வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் 17ஆம் நூற்றாண்டிலேயே ஆயுதப் போராட்டம் நடத்தி சிற்சில வெற்றிகளைப் பெற்றவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள்.
கட்டபொம்மன், பூலித்தேவர் என பல வீர வரலாறுகளை தென் தமிழகம் கொண்டுள்ளது. பூலித்தேவர் படையில் தளபதியாக இருந்து பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தவர் மாவீரன் ஒண்டிவீரன். அவரது 248ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை, சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் நினைவு மண்டபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த மன்னன் பூலித்தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையைப் போலவே சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளது
இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவரின் முன்னோர்கள், அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள். அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.
அந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவன் இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள், அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.
பூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்துள்ளார் ஒண்டிவீரன்.
அந்த காலகட்டத்தில்தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் வரி கேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலித்தேவரோ ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக 1755ஆம் ஆண்டு பூலித்தேவருக்கு எதிராக நடைபெற்ற போரில் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். அவரது கோட்டையை தகர்க்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் வெடிகுண்டுகள் இல்லாத நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.
ஆனால் பூலித்தேவரும் அவரது தளபதியான ஒண்டிவீரனும் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு ஆங்கிலேயப் படையை மதுரைக்கு திரும்பிப்போகச் செய்துள்ளனர்.
பூலித்தேவரின் மரணத்திற்குப் பின் அவரது மகன்களின் படையில் ஒண்டிவீரன் தளபதியாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவரது மரணம் பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. அருந்ததியர் சமூகத்து மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஒண்டிவீரனின் வரலாறு நாட்டுப்புற பாடல்களாக வலம் வருகின்றன.
”சின்னான் பகடை பெரியான் பகடை
சிவத்தசொக்கன் கருத்தச் சொக்கன்
அண்ணன் தம்பிமார் அழகிரியுடன்
அஞ்சாறு பகடையுடன் ஒண்டியாம்…
இத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்
அத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்
வலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்
வேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”
என நாட்டுப்புற பாடல்கள், நொண்டிச் சிந்து ஆகியவை ஒண்டி வீரன் குறித்த நினைவுகளைத் தாங்கியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை