பிரம்மாண்டத்தையும் வரலாற்றையும் இணைத்த சைரா!

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்றுப் படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள படமே சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். பாகுபலிக்குப் பின் தெலுங்கிலிருந்து அதிக பட்ஜெட்டில், அதாவது சுமார் 240 கோடியில் உருவாகிவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி.


இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. படத்தின் பட்ஜெட் அளவிற்கு படத்தில் பங்களித்த கலைஞர்களும் உழைத்துள்ளதை சமீபத்தில் வெளியான இப்படத்தின் மேக்கிங் வீடியோவில் பார்த்தோம். அவர்களது உழைப்பிற்கான மெய்வருத்தக் கூலியாக வந்திருக்கிறது இதன் டிரெய்லர்.
https://www.tamilarul.net/
சுதந்திர போராட்டத்தில் மங்கல் பாண்டே, ஜான்சி ராணி லட்சுமி பாய் அளவிற்கு போற்றப்பட வேண்டிய சைரா நரசிம்ம ரெட்டியின் கதையாகவும், வீரமான வரலாறாகவும் இதன் டிரெய்லர் உருவாகியுள்ளது.


டிரெய்லரில் சில நொடிகளே தோன்றும் படத்தில் நடிக்கும் முக்கியமான நட்சத்திரங்கள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை தூண்டியிருக்கிறார்கள். பாகுபலிக்குப் பின் தெலுங்கு திரையுலகின் அடுத்த பிரம்மாண்டமாக சைராவை முன்மொழியவைத்திருக்கிறது இதன் டிரெய்லர்.
இப்படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை ராம் சரண் தயாரித்துள்ளார். பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.