மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ!!
சீனாவில் நடைபெற்று வரும் கண்காட்சியில் மூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’ ஒன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த உலக ‘ரோபோ’ மாநாட்டு கண்காட்சியை நடத்தி வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக ‘ரோபோ’ மாநாட்டு கண்காட்சி தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 20 ஆம் திகதி தொடங்கியது. ‘ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாட்டு கண்காட்சி வரும் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டு கண்காட்சியில் உளவு, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழிற்துறைகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில், மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ, ஆபத்து காலங்களில் உதவும் தன்மை கொண்ட நாய் ரோபோ, பியானோ வாசிக்கும் ரோபோ, பார்களில் மது வினியோகிக்கும் ரோபோ, குழந்தைகளிடம் தோழமை பாராட்டி விளையாடும் ரோபோ, அரை கிலோ எடையுடன் 20 நிமிடங்கள் பறக்கக் கூடிய பறவை ரோபோ, நீரில் நீந்தும் மீன் ரோபோ உள்ளிட்டவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்த மாநாட்டு கண்காட்சியில் 22 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை