ஐ.தே.கவிற்குள் பாரிய பிளவு – மஹிந்த அணி!

ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘முழு நாட்டையும் முரண்பாட்டுக்குள் தள்ளிய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

நாட்டை கட்டியெழுப்புவதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், நாட்டை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் நவீன் திசாநாயக்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன என அனைவரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட போட்டி போடுகின்றனர்.

இவர்களில் எவர் வேட்பாளராக வந்தாலும் அவரை தோற்கடிக்கக் கூடிய திறமையான வேட்பாளரை நாங்கள் நிறுத்தியுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது துண்டு, துண்டாக சிதறி போயுள்ளது. அந்த கட்சி பல வருடங்களுக்கு கட்டியெழுப்ப முடியாது. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 89 நாட்களே உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 59 நாட்கள் இருக்கின்றன.

இவற்றுக்கு இடையில், மூன்று அமைச்சுக்கள் எந்த வெட்கமும் இன்றி அப்பாவி மக்களின் பணத்தை விரயமாக்கி வருகின்றன. சஜித் பிரேமதாச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் அமைச்சுக்கள் மிக மோசமாக மக்களின் பணத்தை விரயமாக்கி வருகின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் தமது பிம்பத்தை உயர்த்தி காட்ட இந்த பணம் பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.