மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா!
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த திருக்குறள் பெருவிழா மன்னாரில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் இந்த பெருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் பவணி ஆரம்பமாகி மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையைச் சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ், செந்தமிழருவி மஹா தர்மகுமாரக் குருக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மொழியியற்துறை விரிவுரையாளர் விஐயபாஸ்கரன், முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், மன்னார் தமிழ் சங்க பிதா தமிழ்நேசன் அடிகளார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் கலந்துகொண்டார்.
மேலும் இந்த நிகழ்வில் களைஞர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மாணவர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை