வவுனியா விபத்து – பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பாடு!
வவுனியா மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஈச்சங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து அருகிலுள்ள பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்திருந்தார்.
குறித்த பகுதியில் நின்றிருந்த பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் வீதி ஒழுங்கை பேணாமல் திரும்ப முற்பட்டதாலேயே தான் பள்ளத்திற்குள் விழுந்ததாக காயமடைந்த இளைஞர் தெரிவித்தார்.
எனினும் வீதி ஒழுங்கு முறையிலேயே பயணித்ததாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு வாகனத்தில் பயணித்த உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையில் முரண்பாடு முற்றி வாக்குவாதம் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது தனது தரப்பு நியாயத்தை பொலிசாரிடம் கூறிய இளைஞர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் தெரிவித்தார். இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெறாதமையால் தாம் நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிசார் தெரிவித்தனர்.
இதனால் விபத்தை நேரடியாக அவதானித்த அப்பகுதியில் நின்றிருந்த பொது மக்கள் சிலர் பொலிசாருடன் முரண்பட்டதுடன் குறித்த இளைஞர் உயிரிழந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்று தெரிவித்து பொலிசாருடன் முரண்பட்டதுடன், குறித்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனமே விபத்திற்கு காரணம் என தெரிவித்தனர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
இதனால் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிஸாரை பணித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை