சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது சோயுஸ் விண்கலம்!

இயந்திர மனிதனை ஏற்றிச் சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.


கடந்த வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட சோயுஸ் விண்கலத்தை சர்வதேச ஆய்வு மையத்துடன் தானியங்கி முறையில் சனிக்கிழமை இணைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது இரண்டாவது முயற்சியில் அந்த விண்கலம் ஆய்வு மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்கலத்தில் சென்ற ஃபெடார் இயந்திர மனிதனின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இணைவது தாமதமாகிவிட்டது.

அதற்காக அனைவரும் மன்னிக்கவும். எனது பணிகளை மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் குறித்த இயந்திர மனிதன் எதிர்வரும் 7-ஆம் திகதி வரை தங்கியிருந்து, அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு உதவிகள் புரிவதற்கான பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.