மதுரை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்படுகிறதா?

மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்படுவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமங்கலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ‘மதுரை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டிய சூழ்நிலை எதுவும் தற்போது எழவில்லை. மதுரையில் இருந்து திருமங்கலம் பிரிக்கப்படுவதாக திட்டமிட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது. எனினும், குடியிருப்பு அதிகமாகும்போது எதிர்காலத்தில் மதுரை மாவட்டத்தை பிரிப்பது குறித்த பரிசீலனை செய்யப்படலாம். தற்போது மதுரையில் புதிய வட்டங்கள், கோட்டங்கள் உருவாக்குகிறோம்’ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.