ரிஷப் பந்துக்கு நல்ல வாய்ப்பு: கோலி!!

மூன்று வகையான போட்டிகளிலும் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு ரிஷப் பந்துக்கு தற்போது இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்குகிறது. இத்தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ள நிலையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்துக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஏற்கெனவே தோனி ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பில் ரிஷப் பந்த் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இவருக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனக்கு ஓய்வு அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டார். இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், தோனி இல்லாத காரணத்தால் மூன்று விதமான போட்டியிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்று தெரிகிறது. இந்நிலையில், ரிஷப் பந்தின் முழுத் திறனையும் வெளிப்படுத்த இது சரியான தருணம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், “ரிஷப் பந்த் போன்ற இளம் வீரருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும். இதுபோன்ற சர்வதேசப் போட்டிகளில் அவரது முழுத் திறனையும் வெளிக்காட்டி தன்னை நிரூபிக்க வேண்டும். அவரது திறமை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அதை வெளிக்காட்டி இந்திய அணிக்காகத் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். தோனியின் அனுபவம் அணிக்கு எப்போதுமே முக்கியம். அதேநேரம் பந்த் போன்ற இளம் வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மணிஷ் பாண்டே போன்ற வீரர்களுக்கும் இத்தொடர் நல்ல வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தவும், அனைத்து நாடுகளுக்கு எடுத்துச் செல்லவும் டி-20 போட்டிகள் ஏதுவாக இருக்கும் எனவும், அமெரிக்காவில் டி-20 போட்டிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் விராட் கோலி கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.