ஆளுநரை நம்பமுடியவில்லை: காஷ்மீர் நிலவரம்!
ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் கருதி சுற்றுலாப் பயணிகளையும், அமர்நாத் யாத்திரீகர்களையும் வெளியேறும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், யாத்ரீகர்களும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிகின்றனர். விமான டிக்கெட்டுகளின் விலையோ கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்திய விமானப் படையின் சி17 ரக விமானங்களை பயன்படுத்தி பயணிகளை ஜம்மூ காஷ்மீரிலிருந்து வெளியேற்றும்படி மத்திய அரசுக்கு ஜம்மூ காஷ்மீர் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் துணை ராணுவப் படையினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர அவசரமாக காஷ்மீருக்கு அழைத்து வருவதற்காக சி17 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரே பயணத்தில் 230 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய திறன் கொண்ட சி17 ராணுவ விமானங்கள் அதிவேகத்தில் பறக்கக்கூடியவை. மாநிலத்தில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் சத்யபால் மாலிக்கை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போதைய சூழல் குறித்து அமைதி காக்கும்படி தொண்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று அரசியல் கட்சித் தலைமைகளிடம் சத்யபால் மாலிக் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக வலைதளங்கள் வேகமாக பரவிவரும் மிகைப்படுத்தப்பட்ட வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் சத்யபால் மாலிக் கேட்டுக்கொண்டார்.
மேலும், அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பயணிகள் வெளியேறும்படி முந்தைய ஆட்சிகளில் எப்போதுமே அறிவுறுத்தப்பட்டதில்லை. மன்மோகன் சிங், வாஜ்பாய், நரசிம்ம ராவ் போன்றோரின் ஆட்சிக்காலத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் வெளியேறும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டதே இல்லை.
முந்தைய ஆட்சிக்காலங்களிலும் காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகவில்லை. காஷ்மீரில் தற்போது நடைபெறுவது நாம் அனைவருக்குமான பிரச்சினை. கூடுதல் பாதுகாப்பு படையினர் கொண்டுவரப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. ஜம்மூ காஷ்மீர் அரசின் உத்தரவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரை சேராத மாணவர்கள் வீட்டுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களையும் அரசு வெளியேற்றிவருகீறது. உள்ளூர் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சி கற்பித்து மக்களிடையே பீதியை உண்டாக்குகிறது பாஜக அரசு. என்ன நடக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை. அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டாலும் இவ்வளவு பெரிய நடவடிக்கை தேவையில்லாதது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார். ஆனால் அவரது உறுதிமொழி மட்டும் போதாது. இந்திய அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்திய அரசிடமிருந்து உறுதிமொழியை எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீரில் தற்போதைய சூழ்நிலை கருதி குடிமக்கள் யாரும் அங்கு பயணிக்க வேண்டாம் என்று ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை