ஆழிக்­கு­மரன் ஆனந்தன் நினை­வாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீச்சல் தடாகம் இன்று திறக்கப்படவுள்ளது!!

சர்­வ­தேச தரத்தில் உலக சாதனை விளை­யாட்டு வீரர் ஆழிக்­கு­மரன் ஆனந்தன் நினை­வாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வல்­வெட்­டித்­துறை குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் இன்று வெள்­ளிக்­கி­ழமை வல்­வெட்­டித்­து­றையில் ஶ்ரீலங்கா நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.


இந்­நி­கழ்வில் ஶ்ரீலங்காவின் தொலை தொடர்பு வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு விளை­யா­ட்­டுத்­துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ யாழ் மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராசா, எம் .ஏ சுமந்­திரன் ஆகி­யோரும் கலந்து கொள்­வார்கள்.

சிறந்த திற­மை­களை கொண்ட அமை­தி­யான சூழலில் நல்­லி­ணக்­கத்திற்கு உயி­ரூட்டி விளை­யாட்டில் ஈடு­படும் கிரா­மிய விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு சாவ­தேச மட்­டத்தில் விளை­யாட்டு வச­தி­களை வழங்­கு­வ­தனை நோக்­க­மாக கொண்டு இந்த நீச்சல் தடாகம் நிர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

‘ஆழிக்­கு­மரன்’ என்­ற­ழைக்­கப்­படும் வீ.எஸ்.குமார் ஆனந்தன் யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லுள்ள வல்­வெட்­டித்­து­றையில் 1943.05.25 அன்று பிறந்தார். இள­மைப்­ப­ரு­வத்­தி­லி­ருந்தே அவர் கல்வி, விளை­யாட்டு இரண்­டி­லுமே திற­மை­சா­லி­யாகத் திகழ்ந்தார்.

விசேட கடி­ன­மான விளை­யாட்­டுக்கள் மற்றும் உடற்­ப­யிற்­சி­களின் மீதுள்ள அவ­ரு­டைய ஈடு­பாடு மற்றும் ஆர்­வத்தின் கார­ண­மாக அவரால் 7 கின்னஸ் உல­க­சா­த­னை­க­ளையும் கின்னஸ் புத்­த­கத்தில் பதி­வு­செய்­யப்­ப­டாத 7 ஏனைய சாத­னை­க­ளையும் நிலை­நாட்டக் கூடி­ய­தா­க­வி­ருந்­தது.

1983 ஆம் ஆண்­டு­வரை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு கின்னஸ் உல­க­சா­தனைப் புத்­த­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள 7 உல­க­சா­த­னை­க­ளையும் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத 7 ஏனைய சாத­னை­க­ளையும் ஆனந்தன் நிலை­நாட்­டினார். 14 சாத­னை­களில் நான்கு சாத­னைகள் ஒரே­நாளில் நிகழ்த்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

உலக சாத­னை­களைக் கொண்ட கின்னஸ் புத்­த­கத்தில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள ஏழு சாத­னைகள்

1. பாக்கு நீரி­ணையின் ஊடாக தலை­மன்­னா­ரி­லி­ருந்து தென் இந்­தி­யாவின் தனுஷ்­கோ­டிக்கும் மீண்டும் அங்­கி­ருந்து தலை­மன்­னா­ருக்கும் நீந்­திய ஒரே நபர்: நேரம் 51 மணித்­தி­யா­லங்கள் 35 நிமி­டங்கள் – 1975 ஆம் ஆண்டு சித்­திரை மாதம் 18ம் திகதி வெள்­ளிக்­கி­ழமை தொடக்கம் சித்­திரை மாதம் 20ம் திகதி வரை. 40 மைல்கள்

2 .கொழும்பு விஹா­ர­மா­தேவி பூங்­காவில் இடை­வி­டாது தொடர்ச்­சி­யாக துவிச்­சக்­கர வண்டி ஓட்­டி­யமை: நேரம் – 187 மணித்­தி­யா­லங்கள் 28 நிமி­டங்கள் – ஓட்­டிய தூரம் 1487 மைல்கள் – 1979ம் ஆண்டு வைகாசி மாதம் 2 ஆம் திகதி புதன்­கி­ழமை தொடக்கம் வைகாசி மாதம் 10ம் திகதி வரை.

3. கொழும்பு விஹா­ர­மா­தேவி பூங்­காவில் பந்தைக் குத்­து­தலில் ஈடு­பட்­டமை 136 மணித்­தி­யா­ல­ங்கள் 28 நிமி­டங்கள் 1979ம் ஆண்டு மார்­கழி மாதம் 26ம் திகதி புதன்கிழமை தொடக்கம் 1980ம் ஆண்டு தைமாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை.

4. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்­ட­பத்தில் உட்­கார்ந்து எழுதல் . 2 நிமி­டங்­களில் 165 தட­வைகள். 1980 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் திகதி வியா­ழக்­கி­ழமை

5. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்­ட­பத்தில் தொடர்ச்­சி­யாக ஒற்றைக் காலில் சம நிலையில் நின்­றமை 33 மணித்­தி­யா­லங்கள் 1980 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை தொடக்கம் வைகாசி மாதம் 17 ஆம் திகதி வரை.

6.கொழும்பு காலி முகத்­தி­டலில் காலை உயர்த்தி உயர் உதைத்­தலில் ஈடு­பட்­டமை 6 மணித்­தி­யா­லங்கள் 51 நிமி­டங்­களில் 9100 உதைகள், 1980 ஆம் ஆண்டு மார்­கழி மதம் 31ஆம் திகதி புதன்­கி­ழமை தொடக்கம் 1981 ஆம் ஆண்டு தைமாதம் 1 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை வரை.

7. தென் இந்­தி­யாவில் சென்­னையில் அமைந்­துள்ள அண்ணா நீச்சல் தடா­கத்தில் கைக­ளால், கால்­களால் தவளை போல் நீரை உதைத்துக் கொண்­டி­ருந்­தமை. 80 மணித்­தி­யா­லங்கள் 33 வினா­டிகள் 1981 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் திகதி திங்கட் கிழமை தொடக்கம் 1981ம் ஆண்டு ஆவணி மாதம் 1 ஆம் திகதி சனிக்­கி­ழமை வரை.

கின்னஸ் உலக சாத­னை­க­ளாக ஏற்றுக் கொள்­ளப்­ப­டாத ஏனைய குறிப்­பி­டத்­தக்க சாத­னைகள்.
1. வல்­வெட்­டித்­து­றையில் இருந்து இந்­தி­யாவில் உள்ள கோடிக் கரைக்கு பாக்கு நீரி­ணையில் நீந்­தி­யமை 42 மணித்­தி­யா­லங்கள் 1963 ஆம் ஆண்டு பங்­கு­னி­மாதம் 20 ஆம் திகதி புதன் கிழமை தொடக்கம் 22 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வரை- 30 மைல்கள்.

2.கொழும்பு காலி முகத்­தி­டலில் நிறுத்­தாமல் ‘ருவிஸ்ற்’ நட­ன­மா­டி­யமை 128 மணித்­தி­யா­லங்கள் 16 நிமி­டங்கள் 1978 ஆம் ஆண்டு மார்­கழி மாதம் 27 ஆம் திகதி புதன்­கி­ழமை தொடக்கம் 1979 ஆம் ஆண்டு தைமாதம் 2 ஆம் திகதி செவ்­வா­யக்­கி­ழமை வரை

3. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்­ட­பத்தில் தமது உடல் எடைக்குச் சம­னான 130 இறாத்தல் எடை­யுள்ள இரும்பு வட்­டங்­களைத் தூக்கிக் கொண்டு வேக­மாக குந்தி எழும்­பி­யமை 4 நிமி­டங்கள் 24 வினா­டி­களில் 195 தடை­வைகள் 1980 ஆம் ஆண்டு வைகா­சி­மாதம் 15ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை.

4. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்­ட­பத்தில் தமது உடல் எடைக்குச் சம­னான 130 இறாத்தல் எடை­யுள்ள இரும்பு வட்­டங்­களைத் தூக்கிக் கொண்டு ஒற்­றைக்­காலில் சம­நி­லையில் நின்­றமை 6 நிமி­டங்கள் 1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை.

5. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்­ட­பத்தில் 5 சுருள்கள் கொண்ட 80 இறாத்தில் நிறை­யு­டைய மார்பு விரி­வாக்­கியை இழுத்­தலில் ஈடு­பட்­டமை 39 தட­வைகள் 59 வினா­டி­களில் 1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை.

6. தென் இந்­தி­யாவில் உள்ள சென்­னையில் நிற்­காமல் தொடர்ச்­சி­யாக நடத்­தலில் ஈடு­பட்­டமை 149 மணித்­தி­யா­லங்கள் 296 மைல்கள் 1981ம் ஆண்டு ஆவணி மாதம் 1 ஆம் திகதி சனிக்­கி­ழமை தொடக்கம் ஆவணி மாதம் 7 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வரை.

7. யாழ்ப்­பாணம் திறந்த வெளி அரங்கில் 22 அவுன்ஸ் எடை­யுள்ள பிலியட்ஸ் தடியை ஒரு கையினால் மேலும் கீழு­மாக உயர்த்­தி­யமை 2250 தட­வைகள்; 3 மணித்­தி­யா­லங்கள் 59 நிமி­டங்கள் 1982 ஆம் ஆண்டு மார்­கழி மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 1983ம் ஆண்டு தை மாதம் 1ஆம் திகதி வரை.

1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை நான்கு சாதனைகளும் 5 மணித்தியாலங்களில் நிறைவேற்றப்பட்டன.ஈடிணையற்ற உலக சாதனைகளை நிலைநாட்டிய ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் அவ்வாறான மேலதிக சாதனைகளில் பேராவல் கொண்டிருந்ததுடன் ஆங்கிலக் கால்வாயை (இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையில்) நீந்திக் கடக்க முயற்சித்தபோது கடுங் குளிரான நீரில் சிக்குண்டு 1984.08.06 ஆம் திகதியன்று உயிரிழந்தார்

கின்னஸ் சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக வல்வெட்டித்துறையில் நிர்மாணிக்கப்பட்ட குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்படுகிறது!





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.