வவுனியாவில் தமிழ்மக்கள் கூட்டணியின் கட்சி காரியாலம் திறப்பு!!📷

வவுனியாவில் இன்று முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்மக்கள் கூட்டணியின் கட்சி காரியாலம்  மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கபட்டது.
காலை 9 மணிக்கு வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவிலில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட சி.வி.விக்னேஸ்வரனை, மன்னார் வீதி வழியாக இளைஞர்கள் ஊர்வலமாக அழைத்துவந்தனர்.


அதன்பின்னர், கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, கட்சியின் யாழ், வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிறி, மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.