தமிழீழ விடுதலைப்போராட்டத்தை களங்கப்படுத்தும் நூல்கள் யாழ் புத்தக கண்காட்சியில்!

சுரேன் ராகவன் அவர்கள் சிறிலங்கா பேரினவாத அரசின் ஒரு கைக்கூலியாக செயற்பட்டுவருவது யாவரும் அறிந்த விடயம் அந்த நிலையில் தமிழீழத்தில் இருக்கின்ற இளையோர் மீது தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் தவறான எண்ணக்கருக்களை விதைப்பதற்கா இவ்வாறான விசமத்தனமான செயல்களில் சுரேன் ராகவன் களமிறங்கி இருக்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாறும் புனிதமும் தமிழன் என்கின்ற இனமிருக்கும் வரை இருக்கும் என்பது யாவரும் அறிந்தது ஆனால் எதிரியானவன் அதை சிதைப்பதற்காக பல்வேறு விசம் பிரச்சாரங்களையும் இது போன்ற வரலாற்று திரிபுகளையும் எம்மீது திணிக்க முயற்சிக்கின்றேன் ஆகவே நாம் அனைவரும் எமது வரலாற்றை எமது போராட்டத்தை எமது அடுத்த சந்ததிக்கு சரியான வழிமுறையில் கொண்டு சேர்க்க வேண்டியது எமது கடமையாகும்.
கருத்துகள் இல்லை