இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேவுப் பிரிவுக்கான (CID) உபபொலிஸ் பரிசோதகர்(SI)உத்தியோகத்தர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள்!!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேவுப் பிரிவுக்கான (CID) உபபொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


எதிர்வரும் 30ம் திகதியுடன் (30-08-2019) விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைகிறது.

பொலிஸ் உத்தியோகத்தருக்கு க.பொ.த.சாதாரண தரத்தில் ஆறுபாடங்களில் சாதாரண சித்தியும் உப பரிசோதகருக்கு உயர்தரத்தின் மூன்று பாடங்களிலும் சித்தி இருந்தால் போதுமானது. உயரம் மற்றும் உடற்தகுதிகள் கவனிக்கப்படும்.

எமது பகுதிகளில் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஜாம்பாவான்களாக மிளிர்ந்துவிட்டு பின்னாட்களில் வெளிநாட்டில் குறைந்த சம்பளத்துக்கு தொழில் புரிந்துவருகின்றனர். ஊரிலும் சாதாரணதர உயர்தர சித்தியுடன் குறைந்த சம்பளத்துக்கு கூலித்தொழிலும் ஹோட்டல்களுமாக வலம்வருகின்றனர். மேற்சொன்ன பதவிகளில் சிறப்பான முறையில் விளையாட்டுத்திறனை காண்பிக்கும் பட்சத்தில் முழுவதுமாக பொலிஸ் விளையாட்டுப் பிரிவில் உள்ளீர்ப்புச் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அதுவும் சிவில் உடையுடன் நல்ல வருமானம் ஓய்வூதியம் நோய்களின் போது உள்நாடு அல்லது வெளிநாட்டு மருத்துவ வசதிகள் போக்குவரத்துக் கொடுப்பணவு உட்பட பல சலுகைகளுடன் நல்ல சம்பளத்துடன் கெளரவமான பதவி எங்களை நோக்கிவந்த்தும் நாம் பாராமுகமாக இருப்பதுதான் விந்தையாக இருக்கிறது. எமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் இப்போது இப்பதவிகளுக்கெல்லாம் செல்வதில்லை. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.