மட்டு-அம்பாறையிலும் எழுக தமிழ் பரப்புரைகள் முன்னெடுப்பு!


கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.வசந்தராஜா தலைமையிலான எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால் இப்பரப்புரை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் குறித்த பகுதிகளில் உள்ள சமூக மட்ட அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தும் எழுக தமிழ் குறித்த கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், வாளைச்சேனை, வாகரை, ஓட்டமாவடி-வாகனேரி, கிராண், செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகரம், வவுணதீவு, ஆரையம்பதி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கல்முனை, காரைதீவு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.