எழுக தமிழ் பேரணியில் அணி திரண்டு எம்நிலையை உலகுக்கு உணர்த்துவோம்! சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம் அறைகூவல்!தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அரசியல் பேதங்கடந்து தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு எங்களின் அவலநிலையை உலகுக்கு எடுத்தியம்ப வேண்டுமென சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய சிவஶ்ரீ கலாநிதி து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.


எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச இந்து மத குருமார்கள் ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் வணக்கத்திற்குரிய சிவஶ்ரீ கலாநிதி து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் விடுத்த விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் இனம் இன்று பல்வேறு வழிகளில் அடக்கப்பட்டு அவலப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமையை சர்வதேச நாடுகளுக்கும் சிங்கள மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். எங்களின் அவல நிலையை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓரணியாகத்திரண்டு தெரியப்படுத்தும் போது, அதற்கான அங்கீகாரம் என்பது சாத்தியமாகும். எனவே அரசியல் உள்ளிட்ட இன்னோரன்ன பேதங்களை மறந்து எங்கள் தமிழினம் என்ற ஒரே இலட்சியத்துடன் மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் நாம் அனைவரும் பங்கேற்போம்.


இன்றை கால கட்டத்தில் பௌத்த ஆதிக்கம் எங்கள் ஆலயங்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே இந்து மதக் குருமார்களும் ஆலய பரிபாலகர்களும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று ஒற்றுமையே எங்களின் மிகப்பெரும் பலம் என்பதை நிரூபிக்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.