எழுக தமிழ் பேரணிக்கு தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம் பூரண ஆதரவு!



வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெறவுள்ள எழுக தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக அதன் தலைவர் நாகன் கணேசன் தெரிவித்துள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்காக நடாத்தப்பட்ட பல போராட்டங்களை முன் நின்று நடாத்தியவன் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதி வேண்டி நடாத்தப்படும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.


மேலும் இம்மக்கள் எழுச்சிப் பேரணி தமிழ் மக்களுடைய தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை சர்வதேசத்திற்கு ஞாபகம் ஊட்டும் வகையில் வெற்றியளிக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.