அநாதரவாக நின்ற தென்பகுதி முதியவர் - ஊடகவியலாளர்களின் மனிதாபிமான செயற்பாடு!

வவுனியா பேருந்து நிலையத்தில் அநாதரவாக நின்ற மாத்தறையை சோ்ந்த 80 வயதான தென்னிலங்கை முதியவா் ஒருவருக்கு வவுனியா ஊடகவியலாளா்கள் அடைக்கலம் பெற்றுக் கொடுத்திருக்கின்றனா்.


மாத்தறை- கம்புறுபிட்டிய சேர்ந்த பிரேமதாச எனும் குறித்த முதியவர் மாத்தறையில் இருந்து வவுனியா வந்து பேரூந்து நிலையத்தில் இறங்கி ஏ9 வீதியில் உளள பேரூந்து தரிப்பிடம் ஒன்றில்

நீண்ட நேரமாக அமர்ந்து இருந்த நிலையில் , அங்கிருந்த உணவகம் ஒன்றில் உணவு கேட்டு பெற்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த முதியவருடன் உரையாடிய உணவக உரிமையாளர் அவர் அடைக்கலம் இல்லாது தனிமையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை அறிந்து ஊடகவியலாளா்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் முதியவரின் நிலமையை கேட்டறிந்த பின் வவுனியா மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் ஆகியோருக்கு முதியவர் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற அவர்கள் முதியவரை வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள சாயி சிறுவர், முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்ற போது உங்களுக்கு ஏன் இந்த வேலை எனக் கூறி முதியவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டனர்.

இதனையடுத்து தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் கோவில்குளம், சிவன் முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டு முதியவருக்கு அடைக்கலம் கொடுக்க அனுமதி பெற்ற நிலையில் முதியவரை ஊடகவியலாளர்கள் அங்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

இந்நிலையில் உதவிபுரிந்த ஊடகவியலாளர்களிற்கும் சமூக ஆர்வலர்களிற்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.