இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரு ஈழ அகதிகள்!!
இந்திய மீனவா்களுடன் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இரு இலங்கையா்களை இலங்கையில் வாழுமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.
கடந்த மாதம் 31ம் திகதி தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து நபர் ஒருவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க புறப்பட்ட நான்கு பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது
திடீரென ஏற்பட்ட சூழல் காற்றினால் படகு பாறையில் மோதியுள்ளது.
இந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையிடம் உதவிகோரி தஞ்சம் அடைந்தனர்.
எனினும் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வரையும் கைதுசெய்த இலங்கை கடற்படை யாழ் நீரியல்வளத்துறைத் திணைக்களத்தினரிடம் அவர்களை கையளித்தனர்.
குறித்த மீனவர்களை திணைக்களத்தினர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் விளக்க மறியலில் இருந்த நால்வரும் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது , இந்திய மீனவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் வரக் கூடாது என எச்சரித்து விடுதலை செய்து நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் , ஏனைய இருவரும் மன்னார் மற்றும் ,யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, கடந்த 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டு இறுதி கட்ட போரின் போதே அவர்கள் தமிழகத்தின் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து , இலங்கை ஏதிலிகளை மீன்பிடிக்க தமிழக மீன் வளத்துறை அனுமதிப்பதில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி அவர்கள் இருவரையும் பத்து ஆயிரம் ரூபா அபராதம் விதித்து இலங்கையில் உள்ள அவர்களது சொந்த ஊர்களில் தங்கலாம் என உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை