காங்கிரஸ் வேட்பாளருக்கு ஸ்டாலின் நெருக்கடி!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு இன்னும் 11நாட்களே உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 8ஆம் தேதி மாலை நாங்குநேரியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். இன்று தொகுதிக்குட்பட்ட செங்குளம், தருவை ஆகிய பகுதிகளில் மக்களுடன் கலந்துரையாடி ரூபி மனோகரனுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 9) அதிகாலை கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்புக்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அய்யா வைகுண்ட சாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, நாங்குநேரியில் போட்டியிடும் தனக்கு ஆதரவளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அங்கிருந்து உடனடியாக நாங்குநேரி திரும்பி பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்.
அய்யா வைகுண்டசாமி கோயிலுக்குச் செல்வது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம், ரூபி மனோகரன் தெரியப்படுத்தியிருக்கிறார். அதற்கு ஸ்டாலின் தரப்பிடமிருந்து, தாராளமாகச் சென்றுவாருங்கள். ஆனால், காலை நடைபயண பிரச்சாரம் ஆரம்பிப்பதற்குள் வந்துவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, நாங்குநேரியிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள சாமித்தோப்பு அய்யா வைகுண்டநாதர் ஆலயத்திற்கு அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் சென்று வழிபாடு நடத்திவிட்டு, அங்கிருந்து கார் மூலமாக உடனே நாங்குநேரிக்குத் திரும்பினார். காலை 8 மணியளவில் ஸ்டாலினுடன் நடைபயணப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்.

No comments

Powered by Blogger.