‘ரன்மிஷின்’ கோலி இரட்டை சதம் அடித்து அசத்தல் !

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

புனேயில் நடைபெற்று வரும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில், உணவு இடைவேளைக்கு தனது 26ஆவது சதத்தை பதிவு செய்த கோலி,  அதன் பிறகு பிரமாதமாக விளையாடி 295 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் தனது 7ஆவது இரட்டை சதத்தை கோலி கடந்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 7ஆவது இரட்டை சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் கோலி படைத்தார், அதுவும் தனது தலைமையிலான 50ஆவது டெஸ்டில்.
தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 592 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 247 ரன்களுடனும், ஜடேஜா 89 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.