சிவாஜிலிங்கம் தனது முதலாவது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்!!

2வது சங்கிலி மன்னன் வீழ்த்தப்பட்டு 400 ஆண்டுகளின் பின்னர், நாங்கள் எங்கள் இழந்த ஆட்சியை மீட்க தீர்மானித்து மீட்க உக்கிரமாக இருக்கிறோம் என்பதை காட்ட, சங்கிலி மன்னனில் சிலையில் மாலையை அணிவித்து, வணக்கம் தெரிவித்து, சங்கிலியன் பூங்காவின் முன்பாக முதலாவது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


வடக்கு கிழக்கு தவிர, மலையகம் கொழும்பிலும் பிரசாரத்தை நடத்துவோம் என்றும் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமானவர்கள் தம்மை ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுவரையான ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற அணிலை மரத்தில் ஏறவிட்டவர்களாக இருக்கிறார்கள் எனக்கூறிய அவர், இந்த தேர்தலிலும் மரத்தில் அணிலை ஏறவிட்ட நாய்களாக இருக்கப் போகிறோமா இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த எமது உரிமையை இலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் சொல்லப் போகிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேலை ஜனாதிபதி தேர்தலில்இருந்து விலகும்படி சிவாஜிலிங்கத்திடம் ரெலோ ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.