குர்தீஸ் பெண்போராளிகளிற்காக.!!
மண்ணின் காவல் தெய்வங்களே
உம்மைப்போல் தானே
அன்று நாமும் மண்மீட்க
காவலரனில் போராடினோம்
உங்கள் உடைகளைப் பார்க்கையில்
எங்கள் வரியுடை அல்லவா
நினைவில் வந்து போகிறது.
உங்கள் தோள்களில் தூங்கும்
துப்பாக்கிகளை ஏந்திய தோழியரும்
மரணித்திருப்பார்களோ..?
செங்குருதி படிந்த கறைகளைப்போக்கி
அவள் கனவு நனவாகப் போராடுகிறீர்களா..?
விடுதலைத்தாகம் கொண்ட ஏக்கத்தை
உங்கள் முகம்களில் காண்கின்றோம்
உரிமை இழந்து அடிமையாக வாழ்வதன்
வலிகளை உம்மைப்போல்
நாமும் உணர்ந்தவர்கள் அல்லவா..?
உங்கள் மீது பொழியும்
கொத்துக்குண்டைக் கொண்டு
அன்று எம் இனத்தையும்
அழித்தார்களே கொடியவர்கள்.
உங்கள் மரணத்தை பார்க்கையில்
என் கண்கள் கண்ணீர் சொரிகிறதே
உங்களிற்காக என் உதிரம் கொதிக்கிறதே
நான் என்ன செய்வேன்..?
ஊன் இன்றி, உறக்கம் இன்றி
காட்டிலும் மேட்டிலும் குண்டுமழை நடுவிலும் நாமும் உம்மைப்போல் உரிமைக்காய் போராடினோம்
பதுங்கு குழிகளும்
சுடுகலன்களும் வாழ்வாகிப் போனதே
அன்று...
சிறகிழந்த பறவையாகத் தவிக்கிறோமே
இன்று...
வரி உடைதரித்து வீறாப்பாய்
அன்று நாம் நடந்த வீதிகள்
இன்று நாம் நடக்கையில் ஏளனமாய் சிரிப்பதுபோல் உணர்கிறோம்
வெட்கித்தலை குனிந்து நடக்கிறோமே
எம்மைப்போல் குற்ற உணர்வு
உங்களையும் வாட்டிடக்கூடாது.
வீரமறத்திகளே..
சோர்ந்து போகாதீர்கள்
போராடாமல் சூழ்ச்சிகளில் பெறும்
வெற்றியைவிட
நேர்நின்று யார் துணையுமின்றி போராடுகிறோம் என்று
மார்தட்டிக் கொள்ளுங்கள்
மாவீரர்களை போற்றி வணங்குங்கள்
உங்கள் முகம் காணாதுவிட்டாலும்
நீங்கள் பறிக்கத் துடிக்கும்
வெற்றிக்கனிக்காக நாமும்
உங்களிற்காக வணங்குகிறோம்
போர்க்களங்களில் பெண்கள்யார் என்பதைக்காட்ட
தமிழீழப் பெண்களோடு
"குர்தீஸ்" பெண்களாகிய
நீங்களும் இணைந்தீர்கள்
தியாகங்கள் என்றும் வீண்போவதில்லை
அநீதியை அழித்து வெற்றிவாகை
சூடிக்கொள்ளுங்கள்
எங்கிருந்தாலும் நாங்கள்
உங்கள் வெற்றியில் மகிழ்ந்திட காத்திருக்கிறோம்.
**பிரபாஅன்பு**
உம்மைப்போல் தானே
அன்று நாமும் மண்மீட்க
காவலரனில் போராடினோம்
உங்கள் உடைகளைப் பார்க்கையில்
எங்கள் வரியுடை அல்லவா
நினைவில் வந்து போகிறது.
உங்கள் தோள்களில் தூங்கும்
துப்பாக்கிகளை ஏந்திய தோழியரும்
மரணித்திருப்பார்களோ..?
செங்குருதி படிந்த கறைகளைப்போக்கி
அவள் கனவு நனவாகப் போராடுகிறீர்களா..?
விடுதலைத்தாகம் கொண்ட ஏக்கத்தை
உங்கள் முகம்களில் காண்கின்றோம்
உரிமை இழந்து அடிமையாக வாழ்வதன்
வலிகளை உம்மைப்போல்
நாமும் உணர்ந்தவர்கள் அல்லவா..?
உங்கள் மீது பொழியும்
கொத்துக்குண்டைக் கொண்டு
அன்று எம் இனத்தையும்
அழித்தார்களே கொடியவர்கள்.
உங்கள் மரணத்தை பார்க்கையில்
என் கண்கள் கண்ணீர் சொரிகிறதே
உங்களிற்காக என் உதிரம் கொதிக்கிறதே
நான் என்ன செய்வேன்..?
ஊன் இன்றி, உறக்கம் இன்றி
காட்டிலும் மேட்டிலும் குண்டுமழை நடுவிலும் நாமும் உம்மைப்போல் உரிமைக்காய் போராடினோம்
பதுங்கு குழிகளும்
சுடுகலன்களும் வாழ்வாகிப் போனதே
அன்று...
சிறகிழந்த பறவையாகத் தவிக்கிறோமே
இன்று...
வரி உடைதரித்து வீறாப்பாய்
அன்று நாம் நடந்த வீதிகள்
இன்று நாம் நடக்கையில் ஏளனமாய் சிரிப்பதுபோல் உணர்கிறோம்
வெட்கித்தலை குனிந்து நடக்கிறோமே
எம்மைப்போல் குற்ற உணர்வு
உங்களையும் வாட்டிடக்கூடாது.
வீரமறத்திகளே..
சோர்ந்து போகாதீர்கள்
போராடாமல் சூழ்ச்சிகளில் பெறும்
வெற்றியைவிட
நேர்நின்று யார் துணையுமின்றி போராடுகிறோம் என்று
மார்தட்டிக் கொள்ளுங்கள்
மாவீரர்களை போற்றி வணங்குங்கள்
உங்கள் முகம் காணாதுவிட்டாலும்
நீங்கள் பறிக்கத் துடிக்கும்
வெற்றிக்கனிக்காக நாமும்
உங்களிற்காக வணங்குகிறோம்
போர்க்களங்களில் பெண்கள்யார் என்பதைக்காட்ட
தமிழீழப் பெண்களோடு
"குர்தீஸ்" பெண்களாகிய
நீங்களும் இணைந்தீர்கள்
தியாகங்கள் என்றும் வீண்போவதில்லை
அநீதியை அழித்து வெற்றிவாகை
சூடிக்கொள்ளுங்கள்
எங்கிருந்தாலும் நாங்கள்
உங்கள் வெற்றியில் மகிழ்ந்திட காத்திருக்கிறோம்.
**பிரபாஅன்பு**
கருத்துகள் இல்லை