நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.!!

உன்னிடம் வீழ்ந்த நான்
இன்னமும் மீளவில்லை
என் அன்னமே
உன்னிடம் மயங்கிய என்னை மீட்டுத்தர
இந்த உலகில் எந்த சக்தியும் இல்லையே அன்னமே
நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
என் அன்னமே
உன்னிடமும் சக்தியில்லையே என்னை காக்க
ஒருமுறை உன்னை மீட்டு
என்னை மீட்டுக்கொள்ளேன்
இல்லா உன்னை
இருப்பதாய் தேடி
தொலைகிறேனே
என் தெய்வமே

#பேனா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.