பெரும் வீரம் சதியில் புதையுண்ட நாள் இன்று.!!

வரலாறும் வாழ்ந்த வனமும் என்றும்
உன் நினைவுகளைச் சுமந்தே திரிகிறது

பசிகளைப் போக்கிய உன் கைகளை
மனிதம் நேசித்த  காற்று இன்று தேடுகிறது

உன்னை குற்றவாளியாக்கி
ஊரில் சுகபோக பெருவாழ்வு வாழ்ந்த
போலி மேதைகள் மத்தியில் நீயே பெரும் மேதை

எல்லையைக் காத்த உன் வீரம் தன்னை
இன்று எல்லோரும் புகழ்வதே
உன் ஆற்றலுக்கு கிடைத்த மணிமகுடம்

காடு வனம் எல்லாம் தடம் பதித்த
உன் கால்களின் பெருமையை
நீ இல்லாத போது உணர்கிறார்கள்

நீ இன்று இல்லாத நிலைமையை
உணரும் சமூகத்தின் இன்நிலை போக்க
மீண்டும் வருவாயோ மாவீரரே,,,,

#Moorththy_Dinu

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.