வவுனியாவில் அதிக பனி மூட்டம்!!

வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.


வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது.

இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்தார்.

ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்டபோதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்றும் எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.