தீபாவளி கொடுப்பனவு இல்லை – தொழிலாளர்கள் பெரும் அவதி!

தீபாவளி பண்டிகைக்கான கொடுப்பனவை இன்னும் வழங்காதிருக்கும் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பொகவந்தலாவ லெட்சுமி தோட்ட தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தோட்ட நிர்வாகம் இவ்வாறு செயற்படுவது மனிதநேயமற்ற செயலாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

” தீபாவளி பண்டிகைக்கான கொடுப்பனவாக தமது சம்பளத்திலிருந்து மாதாந்தம் 2 ஆயிரம் ரூபா கழிக்கப்படுகின்றது.

எனவே, 22 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். எனினும், 8 ஆயிரம் ரூபாவை வழங்கும் நிலைப்பாட்டியேயே கம்பனி இருக்கின்றது. தொழிலாளர்களின் பணத்தை கொள்ளையடிப்பது பெரும் அநீதியாகும்.”

கடைசி நேரத்தில் வழங்கி நாம் என்ன செய்வது? எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” என்றும் தொழிலார்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

மடுல்சீமை பிளான்டேசனே குறித்த தோட்டத்தை நிர்வகிக்கின்றது.

பொகவந்தாலாவ சதீஸ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.