28 ஆம் திகதி மத்திய மாகாணத்தில் பாடசாலை விடுமுறை!
மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வீ. இராதாகிருஸ்ணனால், மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனிடம் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தீபாவளி தினத்தின் மறுநாள் மத்திய மாகாணத்திலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என தெரியவருகின்றது.
இது தொடர்பாக அமைச்சர் இராதாகிருஸ்ணன் கலந்துரையாடியதாகவும் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் இராதாகிருஸ்ணன்
தீபாவளி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (27.10.2019) அன்று கொண்டாடப்படவுள்ளதால் அடுத்த நாள் (28) விடுமுறை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர்களும் பெற்றோர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநேகமான பாடசாலைகளுக்கு தீபாவளி தினத்தின் மறுநாள் மாணவர்களின் வருகை மிக குறைவாகவே காணப்படும்.
எனவே அன்றைய தினம் பாடசாலையை முழுமையாக கொண்டு செல்ல முடியாது.
இதன் காரணமாக குறித்த தீபாவளி தினத்தின் மறுநாள் விடுமுறை வழங்கப்பட்டு அந்த விடுமுறையை மீண்டும் ஒரு நாளில் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை பாடசாலையை நடாத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை