ஊடகவியலாளர்களை சஜித் விலைக்கு வாங்க முயல்கிறார் !
"எனது ஆட்சியில் ஊடகவியலாளர்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினை தீர்க்கப்படும்" என சஜித் சொல்கிறார்.
இதை ஊடகவியலாளர்களை சஜித் விலைக்கு வாங்க முயல்கிறார் எனவும், ரணிலும் இப்படித்தான் ஊடகர்களை விலைக்கு வாங்கினார் எனவும் சில "அறியாதோர்" சொல்கிறார்கள்.
இந்த அறியாதோருக்கு என் பதில் இதோ!
"ஊடகவியலாளர்களை, சஜித் விலை பேசுகிறார். இதைப்போல் தான் ரணிலும் விலைக்கு வாங்கினார்" என்ற குற்றச்சாட்டுகளை கண்டு வெட்கமடைகிறேன். வேதனையடைகிறேன்.
ரணில் யாரை விலை பேசி வாங்கினார்? அத்தகைய ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியல் இருந்தால் தாருங்களேன், பார்க்கலாம்.
சரி அப்படியே விலைக்கு வாங்கி இருந்தால் அவர்கள் இன்று எங்கே?
இலங்கையின் மிக பெரும்பாலான அச்சு, இலத்திரன், இணைய ஊடகவியலாளர்கள் ரணிலுக்கும், எமக்கும் எதிராக அல்லவா இருக்கிறார்கள்?
ரணிலின் சொந்த சகோதரனின் ஊடகம் டிஎன்எல் டீவி/வானொலியே எம்மை விளாசி தள்ளுகிறது.
ஒரு உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள்.
அன்று ரணிலும், இன்று சஜித்தும் ஊடகர்களுக்கு காணி, வீடு, இலஞ்சம் தருகிறார்களோ, இல்லையோ, நானும் சேர்ந்து போராடி பாடுபட்டு உருவாக்கிய நமது இந்த அரசாங்கம் ஊடகவியலாளருக்கு, "உயிர் வாழும் உரிமை"யை, "சித்திரவதைக்கு உள்ளாகாத உரிமை"யை, "மிரட்டலை எதிர்கொள்ளாத உரிமை"யை, மொத்தத்தில் "அரச பயங்கரவாதம்" இல்லாத நிம்மதியான ஊடக தொழில் சுதந்திரத்தை தந்திருக்கிறது.
நீங்கள் எங்களை தூஷணத்தால் திட்டுங்கள்; எங்கள் கருத்துகளை திரித்து எழுதுங்கள்; நாங்கள் செய்தவைகளை திட்டமிட்டு மறைத்து, செய்ய தவறியவற்றை மாத்திரம் பட்டியல் போட்டு எழுதுங்கள். ஊடக தர்மங்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டு எதிர்கட்சியிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு எழுதுங்கள். கூறுங்கள்;
ஆனால் இதற்காக நாம் உங்களை கொலை செய்ய மாட்டோம். உங்களை தேடி தாக்கி, உங்கள் கை, கால், மண்டையை உடைக்க மாட்டோம.
மாறாக உங்கள் ஊடக தொழில் சுதந்திரத்தை நாம் உறுதிதான் செய்வோம். தெடர்ந்தும் செய்கிறோம்.
இதுதான் மகத்தானது. இதுதான் உயர்வானது.
சஜித்தோ, ரணிலோ தந்த அல்லது தருவதாக கூறும், காணி, நிலம், வீடு என்பவற்றைவிட, இந்த "தொழில் சுதந்திரமே" பெருமைக்குரியது என்பதை ஊடக மனசாட்சி அறியும்.

கருத்துகள் இல்லை