வல்லாதிக்க அரசியல் போக்கில் எம் எண்ணங்கள்!!

காலம்
கனதியானது,
காத்திரமானது,
நெடுந்தூர பயணத்தை
முடிக்கின்ற வல்லமை
காலத்திற்கே உள்ளது.

மனங்கள் மாறுதலும்
எண்ணங்கள் சிறத்தலும்
சிந்தனைச் சீறலும்
காலத்தின் மாயமே.

மறதி என்பது
மனித வாழ்வின் தேவையே.
ஆனால்
மறக்கவேண்டியவற்றை மட்டுமே
மறத்தல்  சிறப்பு.

சில சம்பவங்கள்
சூட்சுமங்களில் உருவாக்கப்படுபவை.
அதன் ஆழம் புரியாமல்
அமிழ்ந்து போதல் நன்றல்ல.
 அழகென்பது ஆச்சரியமானது தான்,
ஆராதிக்கவேண்டியது தான்.
அழகு எண்ணங்களை சிதைப்பது
அனுமதிக்ககூடியதல்ல.

வல்லாதிக்க அரசியல் போக்கில்
எம் எண்ணங்கள்
சிறு துளியாகவேனும்
மின்னுதல் வேண்டும்.

நம் பலவீனம் என்பது
வீழ்த்த துடிப்பவரின்
பலமாகிவிடும்.
உணர்தல் தேவை.

உரமாகிப் போனோரின்
உயிர்த்தியாகம்
சுயநலத்திற்கானதல்ல,
எங்களுக்கானது.

ஆழ் சிந்தனைத்திறனும்
ஆராயும் மனப்பக்குவமும்
இன்று நாளையல்ல,
என்றுமே அவசியம்.

எஞ்சியிருக்கும்
எம் உணர்வுகளை
கட்டுப்படுத்தலாம்,
காவுகொடுத்துவிடக்கூடாது.

ஒரு துப்பாக்கி
சாதிப்பதைவிட
ஒரு பேனாவின் சாதனை
பெரிதென்பர்.........

கோபிகை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.