அழகான ஆடையும் நகைகளுமாய் தன்னை மூடிக்கொண்டு அவள்.!

தேக்கிவைத்த கனவுகளும்
கற்றுக்கொண்ட பாடங்களும்
வீடுதுடைக்கவும் குழந்தைவளர்க்கவும்
உடல்நிலைசரியில்லாதபோது குழந்தைக்கு வரும் மருந்துக்கான விளக்கம் படிக்கவும்
வீட்டில் குழந்தைக்கு
ஆரம்பக்கல்வி கற்றுக்கொடுக்கவுமாய்
அவளுக்கு உதவுகிறதாம்,

என்னசெய்கிறாய் எனக்கேட்டேன்
ஹவுஸ்ஒய்ப்பாம்

அத்தனை அடித்துப்பிடித்து
இரவு விழித்துப்படித்ததெல்லாம்
இதற்குத்தானா ?

முகமறியாத யாருக்காகவோ
தன்னை அற்பணித்துவிட்டு
பொய்யான புன்னகையோடு
விலகிப்போகும் அவள் கண்கள்
தேக்கிவைத்த கண்ணீரை
தூரப்போகும்போது உதிர்ப்பது
அவள் கைகள் முகத்தை நோக்கி போய் துடைப்பதில் கண்டேன்.

அவள் கால்களின் வேகம்
யாரும் அவளிடம் எதுவும் கேட்டுவிடக்கூடாது என்று காட்டிக்கொண்டது.

கனவுகள் எல்லாம் உடைத்து புதைத்துவிட்டு
தான் பெற்றவர்களுக்கு
என்ன கனவை போதிக்கப்போகிறாள்?

திருமணங்கள் இப்போதெல்லாம்
யார் கனவையோ நிறைவேற்ற
யார் கனவையோ உடைத்து விடுகிறதோ...?
என்விழியும் ஈரமானது என்னிடம் அனுமதி கேட்காமலே....

#பேனா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.