தாயக இசைவாணருக்கு வெண்பனிநாட்டில் முடிசூடி மாண்பேற்றிய நிகழ்வு !

ஈழவளத்திருநாட்டின் இசையமைப்பின் முடிசூடா மன்னனாக வாழ்ந்த திருவாளர்.முத்துக்குமாரு கோபாலகிருஸ்ணன் (கண்ணன்)  அவர்கட்கு யேர்மன், நெதர்லாந்து ,கலைஞர்கள், மக்கள் அளித்த மாண்பேற்று விழா 26.10.2019 (சனிக்கிழமை)  யேர்மனி வூப்பெற்றால் வூப்பர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வின் கதாநாயகன் திரு.கண்ணன் அவர்கள் மங்களவாத்திய இசையோடு மண்டபத்திற்கு அழைத்து வர கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறைசார்ந்தோர், ஆலயகுருமார், நலன்விரும்பிகள், மக்கள் என அனைவரும் விழா மேடைக்கு அழைத்துவர.
மங்கலவிளக்கேற்றலுடன் ,அகவணக்கம் தொடர நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து மங்கள இசை, வரவேற்புரை, பக்திஇசை, நடன நிகழ்வுகளை தொடர்ந்து இசைவாணருக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
                                          மதிப்பளிப்பும்,வாழ்த்துரைகளையும்                                           யேர்மனி மற்றும் நெதர்லாந் நாட்டு கலைஞர்கள் வழங்கினார்கள். இசைவாணர் அவர்கட்கு "இசைக்கலைஞானமாமணி " விருதும் கிரீடமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து இசைவாணர் மகன் திரு. கோ.சாய்தர்சன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார் .இசைவாணர் இசையில் உருவான பாடல்கள், மற்றும் சில சினிமாபாடல்கள் மேடையை அலங்கரிக்க. நிகழ்வின் ஏற்ப்பாட்டுக்குழு சார்பாக திரு. சண்.தேவகுருபரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

பத்திரிகைச்செய்திக்காக......
கி.த.கவிமாமணி .....யேர்மனி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.