மனித உரிமை மீறல்களை முறையிட சிறப்பு பிரிவு.!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் போது அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைபாடுகளை பதிவு செய்வதற்காக பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது.


இதன்போது 24 மணித்தியாலயமும் முறைபாடுகளை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு 1996 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு இவ்வாறு தகவல்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அலகுக்கு பொறுப்பான அதிகாரி , தேர்தல் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளும் அலகு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,இல.14,ஆர்.ஏ.த.மெல் மாவத்தை, கொழும்பு – 04 என்ற முகவரிக்கு எழுத்தின் மூலம் அனுப்பி வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த எழுத்து மூலமான அறிக்கையை 011-2505574 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் அல்லது www.iihrcsrilanka@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்க முடியும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.