அக்ரஹாரா சிறையில் சசிகலா அப்செட்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளை சசிகலா சிறையில் கழித்துள்ள நிலையில், அவரது விடுதலைக்காக அவரது குடும்பத்தினர் பல்வேறு வகைகளிலும் முயற்சித்து வருகின்றனர். கடந்த 25ஆம் தேதி சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை இன்று (அக்டோபர் 27) நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அப்செட்டாக காணப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக சிறைத் துறை வட்டாரங்களில் விசாரித்தோம்...“சசிகலாவை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறுவதற்காக வழக்கமாக அவரைச் சந்திக்கும் இரண்டு தொழிலதிபர்கள் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இன்று தனித்தனியாக வந்திருக்கின்றனர். சசிகலாவுக்கு தீபாவளி வாழ்த்து தொடர்பான அட்டையையும், இனிப்பு வகைகளையும் சிறைத் துறை அதிகாரிகள் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளனர். அதில் வாழ்த்து அட்டையை மட்டும் பெற்றுக்கொண்ட சசிகலா, இனிப்பு பாக்ஸ்களை கொண்டுவந்தவர்களிடமே திருப்பி அளிக்கச் சொல்லியிருக்கிறார். வந்திருந்தவர்களில் ஒருவருக்கு மட்டும் நன்றி தெரிவித்து துண்டுச் சீட்டும் எழுதி அனுப்பியுள்ளார்” என்று சொன்னவர்கள்,
“அரசியலில் தான் நம்பியவர்களே தனக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று சசிகலா மிகுந்த அப்செட்டில் இருக்கிறார். அதனால்தான் தீபாவளியைக் கூட கொண்டாடாமல் இனிப்புகளைத் திருப்பி அனுப்பிவிட்டார்” என்று கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.