தமிழர்களுக்கு ஐ.தே.க. செய்தது என்ன?
ஆட்சியை எற்படுத்த மிகவும் உதவிய தமிழர்களையே ஐக்கிய தேசியக் கட்சியினர் பழிவாங்கினார்கள். அதேபோல யாழ் நூலகத்தை எரித்தது உங்களிற்கு நினைவிருக்குமோ தெரியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கியில்,
“வேறு எந்த தலைவர்களையும் விட அதிகதடவைகள் யாழ்ப்பாணம் வந்தது நான்தான். அத்துடன் முழு நாட்டு மக்களும் யாழிலிருந்து கொழும்பு செல்லவும், கொழும்பிலிருந்து யாழ் வரவும் ஆவன செய்தவர்கள் நாம்தான்.
யாழ்ப்பாண மக்கள் எனக்கு புதியவர்கள் அல்லர். 1970களிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணம் வந்துள்ளேன். அந்த காலத்திலே நாம், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருடன், துரையப்பா காலத்தில் இங்கு வந்தோம்.
வடக்கிலே சிறிமா காலத்தில் விவசாயிகளிற்கு நல்ல காலமிருந்தது. சிறிமாவை விசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். 1978இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வசதிகளை வடக்கு மக்களிடமிருந்து பறித்து விட்டது.
யாழ் நூலகத்தை எரித்தது உங்களிற்கு நினைவிருக்குமோ தெரியாது. அந்த பெறுமதியான நுலகத்தை எரித்ததை முழுமையாக ஐ.தே.க பொறுப்பெடுக்க வேண்டும். அதன்பின் நடந்ததை நான் உங்களிற்கு சொல்ல வேண்டியதில்லை.
ஏ9 வீதி மூடப்பட்டது. வெளிநாட்டு படைகள் இலங்கைக்கு வந்தனர். யுத்தம் 30 வருடம் நடந்தது. முழு நாடும் அகதி முகாமாக மாறியது. இங்கு மட்டுமல்ல தெற்கிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்தன.
ஏ9 வீதியை திறந்து, வீதிகளை, பாலங்களை புகையிரத நிலையங்களை அமைத்து நாம் வசதியை ஏற்படுத்தினோம். மின்சார வசதியேற்படுத்தினோம்.- என கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை