உச்ச நீதிமன்றத் தடையை மீறினாரா ஸ்டாலின்?
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், இன்று (அக்டோபர் 5) திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக அமையுமா என்று அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சந்தித்து, திமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (அக்டோபர் 5) நடைபெற்றது. அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 5,000 பேர் வரை திமுகவில் இணைந்தனர்.
அவர்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின், ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக பேசினார்.
“சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. 2016 தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது என அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டரை வருடங்கள் அதிமுக எம்.எல்.ஏ.வாக இன்பதுரைதான் அமர்ந்திருந்தார். ஆனால், இன்பதுரை தற்போது துன்பதுரையாக மாறிவிட்டார். இந்த காலத்தில் நமது வேட்பாளர் அப்பாவு, நீதிமன்றத்தில் கடுமையாக போராடி வாதாடி மறுவாக்கு எண்ணிக்கை தீர்ப்பைப் பெற்றார்” என்ற ஸ்டாலின்,
“தபால் வாக்குகளில் தில்லுமுல்லு நடந்துள்ளது. ஏறக்குறைய 17 சுற்று வாக்கு எண்ணிக்கை வரை திமுக வேட்பாளர் அப்பாவு முன்னணியில் இருந்தார். கடைசி மூன்று சுற்று எண்ணும் நேரத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அங்கிருந்த திமுக ஏஜெண்டுகளை அடித்து விரட்டிவிட்டு, வேட்பாளர் அப்பாவுவை குண்டுகட்டாக தூக்கி வெளியே போட்டுவிட்டு, அவர்களாகவே ஒரு கணக்கைப் போட்டு முடித்து அதிமுக வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள். அப்போது அப்பாவு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த செய்தி எனக்கு கிடைத்ததும் அப்போதைய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை கோட்டையில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இப்படி ஒரு 15 இடங்களில் திமுக தோற்றதாக அறிவிக்க வேண்டுமென வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்திருந்தனர். நான் சென்று முறையிட்ட காரணத்தால்தான் திண்டிவனம் பிழைத்தது. ஆனால், ராதாபுரத்தில் நியாயம் வழங்கவில்லை. முறையாக தேர்தல் நடந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக, அதிமுக வெற்றிபெற்றது போலவே பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பிவிட்டார். பிரதமரே வாழ்த்து சொல்லிவிட்டார் என்றால் அதிகாரிகள் என்ன செய்வார்கள்? தில்லுமுல்லுவை நடத்தி 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்றதை, அதிமுக வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டனர்” என்று அப்போது நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும், “தற்போது மறுவாக்கு எண்ணிக்கையை சந்திக்கிறேன் என்றுதானே இன்பதுரை வந்திருக்க வேண்டும். எண்ணக் கூடாது என்று அவர் உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார். தவறு நடந்திருக்கிறது என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டது. என்ன நிலவரம் என்று உங்களுக்குத் தெரியும். நீதிமன்றம்தான் அதனை சொல்ல வேண்டும். நான் சொல்லக்கூடாது. இல்லையெனில் இப்போதே சொல்லிவிட்டு சென்றுவிடுவேன். எனக்கும் சொல்ல வேண்டும் என்றுதான் ஆசை. வாட்ஸ் அப், ட்விட்டரில் பார்த்தால் அப்பாவுதான் வெற்றிபெற்றார் என செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இதனை யாரும் மறுக்கவில்லை” என்றும் தெரிவித்தார். இதன்மூலம் ராதாபுரம் தொகுதியில் திமுக வெற்றிபெற்றதாக சொல்லாமல் சொல்லியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
நேற்று மாலை 5 மணிக்கு மேல் கடைசிகட்ட வாக்குப் பெட்டிகளை மீண்டும் எண்ண ஆரம்பித்தார்கள். அந்த பெட்டிகளின் மேல் ஏஜெண்ட்டுகளின் கையெழுத்து இல்லை என்பதால்தான் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டது. தபால் ஓட்டுகளை எண்ணும்போது அங்கே இருந்த அப்பாவுவின் ஏஜெண்ட் ஆக அங்கே இருந்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ,. 19,20,21 சுற்று வாக்கு மின்னணு வாக்குப் பெட்டிகள் எண்ணும்போது அப்பாவுவிடம், ‘இனி உங்களுக்கு பிரச்சினையில்லை’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். இரவு எட்டுமணி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்ததும் அப்பாவு வெளியெ வந்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் பேசியபோது, “வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட சுப்ரீம் கோர்ட் வெளியிட தடை விதித்துள்ளது. அதனால் அதுபற்றி எதுவும் பேச முடியாது” என்று கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு, ‘அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எங்கள் கட்சித் தலைவரிடம் ஆலோசித்து மேற்கொள்வோம்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு இன்பதுரை வெளியே வந்தபோது நிருபர்களிடம் எதுவும் பேசாமல் மௌனமாக சென்றுவிட்டார்.
வாக்கு எண்ணிக்கை முடிவு பற்றி நாம் எதைப் பேசினாலும் அதை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகக் காட்டி வாக்கு எண்ணிக்கையை அறிவிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க அதிமுக தரப்பு முயலும்,. எனவே நாம் எந்த சட்ட சிக்கலுக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்று ஸ்டாலின் உத்தரவிட அதன்படியே அப்பாவு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.
ஆனால் இன்று காலை அறிவாலயத்தில் நடந்தக் கூட்டத்தில் திமுக தலைவரே இப்படி பேசி இன்பதுரைக்கு அனாவசியமாக ஒரு சட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாரே என்று திமுகவினர் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.
அதேநேரம், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பது வாக்கு எண்ணிக்கை முடிவை சென்னை உயர் நீதிமன்றம் அறிவிக்கக் கூடாது என்பதற்காகத்தான். வாக்கு எண்ணிக்கை பற்றி யாரும் பேசக் கூடாது என்பதல்ல. எனவே ஸ்டாலின் பேசியதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை” என்கிறார்கள் திமுகவின் தலைமைக் கழக வழக்கறிஞர்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை