கால் நூற்றாண்டுத் துயரம்!

தமிழ்நாட்டில் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமில் ஈழ தமிழ் அகதிகள் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.

இக் கொடுமைகள் குறித்து நியூசிலாந்தில் வசித்துவரும் மாலதி அவர்கள் இந்தியாவில் வெளிவரும் Economic and Political Weekly  என்னும் ஆங்கில பத்திரிகையில் எழுதிய கட்டுரை தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டு “இலக்கு”  இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தலைவர்கள்  மறந்தாலும் மக்கள் மறக்கமாட்டார்கள் என்பதை மாலதி அவர்களும் இலக்கு இதழ் குழுவினரும் காட்டியுள்ளனர். அவர்களின் உணர்வுகளை பாராட்டப்பட வேண்டியவை.

இனியாவது இக் கொடுமைகளுக்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டும். சிறப்புமுகாம் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.