‘பேட்ட’ வில்லனின் புதிய அவதாரம்!

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள புதிய இந்தி படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படத்தில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி
ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்டவர் படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக். பேட்ட திரைக்கு வரும் முன்பே கேங்க்ஸ் ஆஃப் வசிபூர், ராமன் ராகவ் ஆகிய இந்தி படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நவாசுதீன். ஒடிசலான தேகம், கூர்மையான பார்வை, அனைவரையும் ஈர்க்கும் நடிப்புக்கு சொந்தமான நவாசுதீன், ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்பது பேட்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ரஜினிக்கு எதிரியாகப் பேட்ட படத்தில் இவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. தொடர்ந்து நவாசுதீன் நாயகனாக நடித்த சேக்ரட் கேம்ஸ் இரண்டு சீசன்களாக நெட்பிளிக்ஸில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து வில்லனாகவும், ‘டார்க்’ ஆன களங்களிலும் நடித்து வந்த நவாசுதீன் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ள படமே மோதிசூர் சக்னசூர். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திருமணத்திற்கு பெண் தேடும் 37 வயது வாலிபன் சந்திக்கும் அனுபவங்களை நகைச்சுவை கலந்த பாணியில் உருவாகியிருக்கிறது இப்படம்.

Powered by Blogger.