பேஷன் வீக்: அசத்திய தாய் மகள்!

டெல்லியின் மேஜர் தியான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று லோட்டஸ் மேக் அப் இந்தியா பேஷன் வீக் எஸ்/எஸ்-20, ‘மைஃபேஷன் மை ட்ரைப்’என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ராம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் தயாரிப்பில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு பாலிவுட் பிரபலங்கள் ராம்ப் வாக்கில் பங்கேற்றனர்.

வடிவமைப்பாளர்களான ஃபால்குனி, சஞ்சுக்தா தத்தா, யோகிதா கதம், பிரியா மச்சினேனி, ஜெஞ்சம் காடி, அனுராதா குலி, கஜல் மிஸ்ரா, மேகா ஜெயின், அஞ்சு ஜெயின் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில், திவ்யா ரெட்டி வடிவமைத்த ஆடையை ரகுல் ப்ரீத் சிங்கும், மஹிமா மகாஜன் வடிவமைத்த ஆடையை ஆதியா ஷெட்டியும் , நிதிகா ஷங்கர் வடிவமைத்த ஆடைகளை நேஹா துபியாவும் அணிந்து ராம்ப் வாக் சென்றனர். ஃபால்குனி ஷேன் பீக்காக் வடிவமைத்த ஆடைகளை யாமி கவுதம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வென்ற தாய் மகள்
இந்நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகையான ஷர்மிளா தாகூரும், அவரது மகள் சோஹா அலிகானும் சாமைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான சஞ்சுக்த்தா தத்தா வடிமைத்த, உடைகளை அணிந்து ராம்ப் வாக் சென்றனர். தாய் மகள் இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பார்வையாளர்களிடையே உற்சாகத்தை அளித்தது. காலநிலை மாற்றம் குறித்த உணர்திறனை குறிக்கும் வகையில் நீல நிறத்தில் மல்பெரி பட்டில் வடிவமைக்கப்பட்ட புடவையை ஷர்மிளா தாகூர் அணிந்திருந்தார். சோஹா அலி கான் நீளமான லெஹங்காவை அணிந்திருந்தார். சஞ்சுக்த்தா தத்தாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆடைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த கைதட்டல்களைப் பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.