தமிழ் மக்கள் விடுதலை கட்சி கோட்டாபயவுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.


மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் தாங்கள் இந்த ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் கிழக்கு மக்களின் அனைத்து அமைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் மக்களின் அனைத்து புத்திஜீவிகள் நாங்கள் ஒன்றாக பயணிப்போம். அதேவேளை கிழக்கிற்கு தலைமை தாங்க கூடிய ஒரே ஒருவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தான்- என்றார். .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.