‘பந்தயம்’ உயிரைப்பறித்த பரிதாபம்!!

உத்தர பிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டிய ஒருவர், 41 ஆவது முட்டை சாப்பிடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


42 வயதான சுபாஷ் யாதவ் என்பவரே இந்த பந்தயத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வெறும் இரண்டாயிரம் ரூபாய்க்காக நண்பருடன் ஏற்படுத்திக் கொண்ட சவாலே இவ்வாறு இரண்டு குழந்தைகளின் தந்தையின் உயிரைப் பறித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பந்தயத்தில் முதல் 40 முட்டைகளையும் இலகுவாக சாப்பிட்ட சுபாஷ் யாதவ், 41 ஆவது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செய்யப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

‘முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவை உணவு குழாயை அடைத்ததோடு சுவாசத்தையும் தடுத்து விட்டது. இதனால் அவர் சுவாசம் கிடைக்காமல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்’ என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.