பரத்திற்கு கைகொடுக்குமா ‘காளிதாஸ்’?

கட்டாய வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள காளிதாஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
2003 ஆம் ஆண்டு வெளியான ஷங்கரின் காதல் படத்தில் ‘பாப் கலி' என்ற பாபு
கல்யாணமாக அறிமுகம் ஆனவர் பரத். அடுத்தடுத்த வெளியான ‘ஃபோர் தி பீப்பிள்’, செல்லமே என தனக்கு கிடைத்த முக்கிய கதாபாத்திரங்களில் எல்லாம் கவனம் ஈர்த்தவர். 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ இவரது திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படமாகும். அதன் பின்னர் வெளியான பட்டியல், வெய்யில், எம் மகன், நேபாளி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனாலும், அதற்கடுத்து இவர் தேர்ந்தெடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சிம்பா படமும் ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. இந்நிலையில், பரத் நடிப்பில் உருவாகிவரும் படம் காளிதாஸ். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில், பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒரே விதமாக நடைபெறும் கொலைகளை கண்டுபிடிக்கும் மர்மங்கள் நிறைந்த திரைக்கதையை கொண்ட படத்தின் டிரெய்லராக வந்துள்ளது காளிதாஸ். டிரெய்லரில் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
நாளைய இயக்குநர் சீசன் 3யில் கலந்து கொண்ட ஸ்ரீசெந்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் சுரேஷ் மேனன் நடித்துள்ளார். அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியுள்ளது. லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் ப்ரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வருகின்றனர்.
Powered by Blogger.