ஈழத்தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொலை செய்த குடும்பம் அல்லவா?

ஆம். உண்மைதான்.

இது கோடிக் கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளையடித்த குடும்பம் அல்லவா?

ஆம். உண்மைதான்.

இது நாட்டின் வளத்தை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்ற குடும்பம் அல்லவா?

ஆம். உண்மைதான்.

ஆனால் இத்தனை நாளும் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் யார் காப்பாற்றினார்களோ அவர்களேதான்  இதை இப்போது மீண்டும் கூறுகிறார்கள்.

குறிப்பாக சுமந்திரன் ஜநா சென்று இக் குடும்பம் செய்தது இனப்படுகொலை அல்ல. வெறும் போர்க்குற்றம் என்றார்.

பின்னர் சுமந்திரனே ஜ.நாவில் சர்வதேச விசாரணை தேவையில்லலை. உள்ளு+ர் விசாரணை போதும் என்று கூறினார்.

அதன் பின்னர் இலங்கை கோராமலே கால அவகாசம் இரண்டுமுறை பெற்றுக் கொடுத்து காப்பாற்றினார்.

இவ்வாறு இக் குடும்பத்தை காப்பாற்றிய சுமந்திரன் கும்பல் இப்ப வந்து கூறுகிறது கொலையாளி கோத்தாவுக்கு வோட்டு போடாதீர்கள் என்று.

தமிழ் மக்களை கேனப்பயல்கள் என்று சுமந்திரன் கும்பல் நினைக்கிறதா?

ஜந்து வருடத்தில் இக் குடும்பத்தில் ஒருவரைக்கூட ஏன்  சட்டத்தின் முன் நிறுத்தி சிறையில் அடைக்க முடியவில்லை?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.