யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை இன்று முதல் ஆரம்பம்.!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று 11 (திங்கட்கிழமை) முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து Alliance விமானம் 9I 101 முற்பகல் 10.35 மணிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் 12.30 மதியம் தரையிறங்கும்.
பின்பு Flight 9I 102 பிற்பகல் 12. 45 மணிக்கு யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் 2.10 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு செல்லவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிப்பதற்காக ஒரு வழி விமான கட்டணமாக 18500 Rs அறவிடப்படவுள்ளது.
மேலும் வாரம் ஒன்றுக்கு 3 தடவைகள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை தனியார் விமான நிறவனமான பிட்ஸ் எயார் விமான முன்வந்துள்ளது.
இந்த விமான சேவையை முன்னெடுப்பதற்கான பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை