ஆரம்பமானது வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணி!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அத்துடன், 12 ஆயிரத்து 845 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் ஆயிரத்து 179 வாக்கு எண்ணும் நிலையங்கள் என்பனவற்றுக்கு அவசியமான எழுத்து ஆவணங்கள் உட்பட ஏனைய உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது, தேர்தல் சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் மற்றும் வேட்பாளர்களுக்கு சார்பாக கருத்துகள், விளம்பரங்கள் இடம்பெறுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரினால் வெளியிடப்படுவதாக கூறப்பட்டு முன்னதாக வெளியிடப்பட்ட உண்மைக்குப் புறம்பான தகவல்கள், மீளவும் வெளியாகின்ற நிலை அவதானிக்கப்பட்டது.

அவை குறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்;ந்து நீடித்தால், சமூக ஊடகங்களை தடை செய்யும் நிலைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என சமூக ஊடக பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சமூக ஊடகங்களை அவதானமாக பயன்படுத்த வேண்டும்.

மௌன காலப்பகுதியில், வேட்பாளரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அரசாங்கத்தினால் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்கள் முதல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வரை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஒவ்வொரு அரச ஊழியரும் தமது செயற்பொறுப்பு குறித்த சிறந்த புரிந்துணர்வுடனும், விசேட கவனத்துடனும் எவருக்கும் விசேட கரிசனை காட்டாமலும், பக்கச்சார்பின்றியும் செயலாற்ற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவருக்கும் அஞ்சாமல், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், நீதிமன்றத்திற்கும் மாத்திரமே தாங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, நாடுமுழுவதிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேநேரம், ஜனாதிபதித் தேர்தல் விசேட கடமைகளுக்காக காவல்துறையினரை, நேற்றைய தினம், தங்களது கடமையாற்ற வேண்டிய பிரிவுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.