பாகிஸ்தான் கோட்டாவுக்கு வாழ்த்து!!

2019 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றதையடுத்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயமும் கோட்டாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ருவிற்றரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பதிவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.