கோட்டாவை வாழ்த்தி ருவான் விஜேவர்த்தன பதவி விலகல்!!
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவும் இராஜினாமா செய்துகொண்டுள்ளார்.
இந்தத் தகவலை அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் பிளவுபடாத ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முடியுமென தான் நம்புவதாகவம் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஜனநாயக முன்னிணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து நேற்று இராஜினாமா செய்துகொண்டார்.
இவரையடுத்து, அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரின் பெர்ணான்டோ மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா ஆகியோரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.
மேலும், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம் நேற்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தார்.
அதேநேரம், அமைச்சர் கபீர் ஹசீமும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்தும் அவரது அமைச்சர் பதவியில் இருந்தும் விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பலரும் தற்போது இராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை